ரெயிலில் அடிபட்டு காண்டிராக்டர் சாவு
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு காண்டிராக்டர் பரிதாபமாக இறந்தார்.
கோவில்பட்டி:
காஞ்சீபுரம் மாவட்டம் பம்மல் நாராயணா தெரு, சீனிவாசா காலனியை சேர்ந்தவர் ட்ரென்ஸ் (வயது 56). ரெயில்வேயில் பெயிண்டிங் காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். நேற்று கும்பகோணத்தை சேர்ந்த வின்சென்ட் (36) என்பவருடன் கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கும், லட்சுமி மில் ரெயில்வே மேம்பாலத்திற்கும் இடையே மேற்கு பார்க் ரோடு எதிரே ரெயில்வே தண்டவாள பகுதியில் மின்கம்பத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வந்த தாதர்- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் காண்டிராக்டர் ட்ெரன்ஸ் அடிபட்டு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், ஏட்டு அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான காண்டிராக்டர் ட்ெரன்ஸ்க்கு அபிராமி என்ற மனைவியும், அற்புத பிரதீப்ராஜ், பிரவின் குமார் என்ற மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story