ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு


ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 9 Oct 2021 10:50 PM IST (Updated: 9 Oct 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார். 
ரெயிலில் அடிபட்டு சாவு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாலங்காடு ரகமத் தெருவை சேர்ந்தவர் முகமதுயாசின். இவருடைய மகன் முகமதுபாகத்(வயது22). நேற்று காலை 6 மணியளவில் மயிலாடுதுறை- கும்பகோணம் ெரயில் பாதை இடையே திருவாலங்காடு பகுதியில் முகமதுபாகத் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவரது தலை தனியாகவும், உடல் தனியாகவும் சிதைந்து கிடந்தது. 
பிரேத பரிசோதனை
இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ெரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முகமதுபாகத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story