ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர், நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. இதில் 7 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 40 பேரும், 71 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 310 பேரும், 143 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 504 பேரும், 939 கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,523 பேரும், போட்டியிட்டனர். 4 ஊராட்சி ஒன்றியங்களில் 757 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது.
3 லட்சத்து 68 ஆயிரத்து 378 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். புதிய வாக்காளர்கள் மகிழ்ச்்சியுடன் வந்து தங்கள் முதல் வாக்கை பதிவு செய்தனர். இதனால் விறுவிறுப்பாக வாக்குப்பதிரு நடந்தது. பதட்டமான வாக்கு சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஈராளச்சேரி, ஓச்சேரி, ஆயர்பாடி, மேலகுளம் ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார்.
அரக்கோணம் ஒன்றியத்தில் 1,18,935 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 232 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. தணிகைபோளூர் வாக்குச் சாவடி மையத்தில் நரிக்குறவர் இன மக்கள் உற்சாகமாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது வாக்கு சாவடி மையத்திற்குள் சில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சென்று வருவது அறிந்து அங்கு வந்த மற்ற கட்சியினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேசி அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வாக்கு சாவடி மையத்தில் வாக்குப் பதிவு நடை பெறுவதையும், கொரோனா தடுப்பு முறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story