ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரின் வாக்கு ஏற்கனவே செலுத்தியதாக கூறியதால் பரபரப்பு
ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரின் வாக்கு ஏற்கனவே செலுத்தியதாக கூறியதால் பரபரப்பு
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தைச் சார்ந்தவர் மாரி மனைவி அங்கம்மாள் (வயது 51). இவர் இதே ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடுகிறார். இந்நிலையில் அங்கம்மாள் நேற்று காலை அதே பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்களிக்க சென்றார். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் உங்களது வாக்கு தபால் வாக்காக பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் நான் தபால் வாக்கு எதுவும் செலுத்தவில்லை என கூறினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர் விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை என்ற ஆசிரியருக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டுள்ளதும். வரிசை எண்ணை தவறாக பதிவு செய்ததால் அங்கம்மாள் தபால் வாக்கு செலுத்தியதாக பதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது.
அங்கம்மாள் வாக்கு செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தி ய அதிகாரிகள் அவருக்கு வாக்களிக்க வாக்கு சீட்டு அளித்தனர். இதையடுத்து அங்கம்மாள் வாக்களித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் வாக்கு ஏற்கனவே தபால் வாக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story