அணைக்கட்டு அருகே தனக்கு வேண்டிய வேட்பாளருக்கு வாக்குகளைபதிவு செய்த பெண் பணியாளர்
அணைக்கட்டு அருகே சென்றாயன் கொட்டாய் வாக்குச்சாவடியில் பெண் பணியாளர் ஒருவர் அவருக்கு வேண்டிய வேட்பாளருக்கு வாக்குகளை பதிவு செய்ததால் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே சென்றாயன் கொட்டாய் வாக்குச்சாவடியில் பெண் பணியாளர் ஒருவர் அவருக்கு வேண்டிய வேட்பாளருக்கு வாக்குகளை பதிவு செய்ததால் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு
அணைக்கட்டு ஒன்றியத்தில் 249 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணி முதல் வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்தனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கு கேட்டதால் மற்ற கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மலை கிராமங்களான பீஞ்சமந்தை, ஜார்தான் கொல்லை, பாலாம் பட்டு ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனபர். கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஒரே நேரத்தில் 400-கும் மேற்பட்டோர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. இதனால் டோக்கன் வழங்கப்பட்டு இரவு 7.30 மணிவரை வாக்களித்தனர்.
பெண் பணியாளர் மீது புகார்
ஓங்கப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாயன் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 137-வது வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் இருந்த பெண் ஒருவர் வாக்குப்பெட்டி அருகில் நின்று கொண்டு வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், அவருக்கு வேண்டிய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தி, அவராகவை அந்த சின்னத்திற்கு வாக்குப் பதிவு செய்துள்ளார்.
முதியவர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சின்னத்தில் வாக்களிக்குமாறு பெண் ஊழியரிடம் கூறியுள்ளார். ஆனால அவர் தனக்கு வேம்டிய வேட்பாளரின் சின்னத்தில் வாக்கை பதிவு செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் ஊழியர் இதுபோல் 50-க்கும் மேற்பட்டோர் வாக்குகளை அவருக்கு வேண்டிய வேட்பாளர் சின்னத்திற்கு வாக்களித்ததாக அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தகவலறிந்ததும் முக்கிய கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள், அந்த ஊழியரை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு மணிநேரம் நிறுத்தம்
இதனால் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து வாக்குப்பதிவு நடக்க கேட்டுக் கொண்டதின் பேரில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு மீண்டும் 12.30 மணிக்கு தொடங்கியது.
சென்றான் கொட்டாய் வாக்குச்சாவடியில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் காலையிலேயே வாக்குப் பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார். மீண்டும் மாலை அவர் வாக்களிக்க வந்த போது அவர் ஏற்கனவே வாக்கு செலுத்தி விட்டதாகவும் மீண்டும் கள்ள ஓட்டு போட வந்துள்ளார் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.
Related Tags :
Next Story