6 ஆம்னி பஸ்கள் பறிமுதல்


6 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Oct 2021 11:56 PM IST (Updated: 9 Oct 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

6 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

ஓசூர், அக்.10-
ஓசூர் பகுதியில் 6 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன சோதனையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வாகன தணிக்கை
வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் பி.சுரேஷ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் .துரைசாமி (ஓசூர்), சாமி (கிருஷ்ணகிரி), ராமகிருஷ்ணன் (வாணியம்பாடி), ராமலிங்கம் (ராணிப்பேட்டை), வேலூர் சரக செயலாக்கப்பிரிவு அலுவலர் செந்தில் வேலன்,
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மணிமாறன், அன்புசெழியன், மாணிக்கம், ராஜேஸ் கண்ணா, சிவகுமார், சக்திவேல் மற்றும் கருணாநிதி ஆகியோர் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.
6 ஆம்னி பஸ்கள்
இந்த தணிக்கையின்போது 275 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் 54 வாகனங்களின் மீது தணிக்கை நடவடிக்கை மேற்கொண்டு 6 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆம்னி பஸ்கள் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மற்ற வாகனங்களுக்கு 33 லட்சத்து 87 ஆயிரத்து 35 ரூபாய் சாலை வரி மற்றும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில், இந்த சிறப்பு வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என வேலூர் சரக துணைப்போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.

Next Story