பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்
பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டையில் இருந்து அம்புகோவில் வழியாக கறம்பக்குடிக்கு அரசு பஸ் சென்றது. பின்னர் அங்கிருந்து 25 பயணிகளை பஸ்சில் ஏற்றி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தது. கொல்லம் பட்டி கிராமம் அருகில் இருந்த வளைவில் திரும்பியபோது அருகில் இருந்த பள்ளத்தில் பஸ்சின் முன் சக்கரம் மாட்டிக்கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது. உடனடியாக பயணிகள் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கியதால் யாருக்கும் எந்த காயமின்றி உயிர் தப்பினர். எனவே சாலையோரங்களில் உள்ள பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story