கார் மோதி முதியவர் பலி


கார் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 10 Oct 2021 12:26 AM IST (Updated: 10 Oct 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி முதியவர் பலியானார்.

க.பரமத்தி, 
க.பரமத்தி அருகே நடந்தை- நல்லிபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 80). இவர் தனது மொபட்டில் க.பரமத்தியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று முத்துசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முத்துசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து க.பரமத்தி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் காரை ஓட்டி வந்த கோவை பேரூரை சேர்ந்த மாணிக்கவாசகம் (34) என்பவரை கைது செய்தார்.
சின்னதாராபுரம் அருகே சி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து (60). இவர் தனது வீட்டிலிருந்து கடந்த 5-ந் தேதி சைக்கிளில் சின்னதாராபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காளிமுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் காளிமுத்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story