தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகவதிபுரம் விஸ்தரிப்பு ஆனந்தநகர் கலைஞர் நகரை இணைக்கும் பிரதான சாலையில் உள்ள பாலத்தின் மூடி உடைந்து பள்ளமாக இருப்பதாக தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து புதிய மூடி அமைத்தும், அதன் அருகே பழுதடைந்து இருந்த பாலத்தினை சிமெண்டு கலவை கொண்டும் சரிசெய்தனர். இதற்காக அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், திருவெறும்பூர், திருச்சி.
சுகாதாரமற்ற கழிப்பறை
கரூர் மாவட்டம், புலியூர் காளிபாளையம் ஆதிதிராவிடர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தேவைக்காக அப்பகுதியில் சுகாதார கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் பாசி படிந்து இருப்பதால் சிலர் வழுக்கி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் அதன் அருகே உள்ள நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புலியூர், கரூர்.
பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
பெரம்பலூரில் இருந்து வேலூர், சத்திரமனை, செட்டிக்குளம், ஆலத்தூர்கேட் வழியாக திருச்சிக்கு பஸ் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட வழித்தடத்தில் பஸ் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் கீழமாத்தூர் பஞ்சாயத்து, கைப்பெரம்பலூருக்கு பஸ் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர். எனவே எங்கள் ஊருக்கு பஸ் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மாணிக்கம், கைப்பெரம்பலூர்.
மண்சாலையாக மாறிய தார்ச்சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் 90 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து சின்ன குறிஞ்சி நகர் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக, பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கப்பிகள் வெளிவந்த நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. அதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மழை பெய்யும்போது சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் பெண்கள், வயதானவர்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அவதியாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பானுப்பியா, மேற்பனைக்காடு, புதுக்கோட்டை.
பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, விருதாபட்டி கிராமம், செரலப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மின்சாரம் இருக்கும்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆனந்தராஜ், செரலப்பட்டி, புதுக்கோட்டை.
கான்கிரீட் மூடி பழுதானதால் சாலையில் செல்லும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம் 61-வது வார்டில் உள்ள பர்மாகாலனி ரேஷன் கடை வழியாக மாநராட்சி சிறுவர் பூங்கா மற்றும் திறந்தவெளி நூலகம் அருகே செல்லும் சாலையில் கழிவுநீர் செல்லும் சாக்கடை மேல் உள்ள கான்கிரீட் மூடி பழுதானதால் சாக்கடை நீர் நிரம்பி சாலையில் செல்கிறது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பன்னீர்செல்வம், பர்மாகாலனி, திருச்சி.
பயனற்ற அடிப்பம்பு
திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்டம், வார்டு எண் 63 ஆலத்தூர் பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள அடிப்பம்பு வெகுநாட்களாக பழுதாகி உள்ளது. இதனால் இடுகாட்டிற்கு தண்ணீர் பெறுவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலத்தூர், திருச்சி.
பயணிகளால் தள்ளி இயக்கப்படும் அரசு பஸ்
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கோப்பு வரை 54இ என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் கடந்த இரண்டு மாதங்களாக பேட்டரி பழுதாகி இருக்கிறது. புதிய பேட்டரி மாற்றாமல் பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்சை வழித்தடத்தில் நிறுத்தும் போது பஸ்சின் என்ஜின் நின்று விடுகிறது. பின்னர் பஸ்சினை இயக்குவதற்கு பேட்டரி வேலை செய்வது இல்லை. இதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகளால் பஸ்சினை தள்ளி இயக்கப்படும் நிலை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
க.நவமணிவேல், அயிலாப்பேட்டை,திருச்சி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தோஷ ஆஞ்சநேயர் கோவில் சாலையோரத்தில் உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே தஞ்சாவூர் சாலையில் கோவில் அருகே இருபுரமும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள், கீழப்பழுவூர், அரியலூர்.
சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் நகரில் சனிக்கிழமை தோறும் வாராந்திர காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வணிகர்கள் வர்த்தம் செய்கின்றனர். இதனால் சமயபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வாரச்சந்தையில் பொதுமக்கள் நடந்து வரும் பாதையில் மாடுகள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மாடுகளுக்கு பயந்து கீழே விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்களும் நிறைவேறி வருகிறது. பொதுமக்கள் கூடும் இடத்தில் மாடுகள் புகுந்து இடையூறு ஏற்படுத்தி வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜா, சமயபுரம், திருச்சி.
அடிக்கடி ஏற்படும் மின் நிறுத்தத்தால் பொதுமக்கள் அவதி
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பாவோடி தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருவதால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி சேதம் அடைந்து வருகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பு மூலம் படிக்கும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேட்டுப்பாளையம், திருச்சி.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம், இந்தரா ந௧ர் 65-வாா்டு பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மலை பெய்யும்போது சேறும், சகதியுமாக மாறுவதால் பெண்கள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது தவறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆா்.சங்கரன், இந்திரா நகர், திருச்சி.
சாலையில் உள்ள பள்ளத்தால் நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள்
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அந்தநல்லுர் முதல் கொடியாலம் வரையிலான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதில் சாலையில் பெரிய அளவிலான பள்ளம் உள்ளதால் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அய்யாரப்பன், திருச்சி.
Related Tags :
Next Story