153 மையங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
153 மையங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 153 மையங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர்(பொ) காமாட்சி கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் யூனியன் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காவலர் குடியிருப்பில் உள்ள சமுதாயக் கூடம், நேரு நகர் பகுதியில் உள்ள வட்டார வள மையம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், சத்திரக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், அரியனேந்தல் கிராமத்தில் உள்ள சுந்தரம் நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு கலெக்டர் காமாட்சி கணேசன் நேரில் சென்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை கண்காணித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தலில் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 4 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 8 பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது.
612 பணியாளர்கள்
இதற்காக ராமநாதபுரம் யூனியனில் 15, போகலூர் யூனியனில் 88, பரமக்குடி யூனியனில் 33, திருவாடானை யூனியனில் 3, ஆர்.எஸ்.மங்கலத்தில் 7, முதுகுளத்தூர் யூனியனில் 5, கடலாடி, திருப்புல்லாணி யூனியனில் தலா ஒரு வாக்குசாவடி என மொத்தம் 153 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 65 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
Related Tags :
Next Story