வேன் மோதி குழந்தை பலி
வேடசந்தூர் அருேக பின்நோக்கி வந்த வேன் மோதியதில் பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு வடுகம்பாடியை சேர்ந்தவர் கார்த்திக். அவருடைய மகள் கயல்விழி (வயது 3½). நேற்று முன்தினம் மாலை இவள், அதே ஊரில் உள்ள காளியம்மன் கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது வேடசந்தூர் நோக்கி சென்ற தனியார் மில் வேன், திரும்புவதற்காக பின்பக்கமாக வந்து கொண்டிருந்தது. இதில் எதிர்பாராதவிதமாக வேனின் பின்சக்கரத்தில் கயல்விழி சிக்கி படுகாயம் அடைந்தாள்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, கயல்விழி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து எரியோடு மீனாட்சிபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் பிச்சை (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story