தினத்தந்தி புகார் பெட்டி
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள குறைபாடுகள் புகாா் பெட்டியில் தெவிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூா்:
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள குறைபாடுகள் புகாா் பெட்டியில் தெவிக்கப்பட்டு உள்ளது.
மோசமான சாலை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டெப்போ ரோட்டில் விஜயாநகர் உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் மேடு, பள்ளங்களில் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
கட்டிடம் சேதம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் பரவாக்கோட்டை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலால் கட்டிடம் சேதமடைந்து விட்டது. ஆனால் இன்று வரை கட்டிடம் சீரமைக்கப்படவில்லை. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கட்டிடத்தை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பரவாக்கோட்டை.
Related Tags :
Next Story