இறந்த ஆசிரியை உடலை 7 நாட்களாக வீட்டுக்குள் வைத்து ஜெபம் செய்த மகள்கள்
மணப்பாறை அருகே இறந்த ஆசிரியையின் உடலை 7 நாட்களாக வீட்டுக்குள் வைத்து, அவரது மகள்கள் ஜெபம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணப்பாறை, அக்.10-
மணப்பாறை அருகே இறந்த ஆசிரியையின் உடலை 7 நாட்களாக வீட்டுக்குள் வைத்து, அவரது மகள்கள் ஜெபம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 மகள்களுடன் வசித்த ஆசிரியை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) வசித்து வந்தார். அவருடன் திருமணமாகாத மகள்கள் ஜெசிந்தா (43), ஜெயந்தி (40) ஆகியோரும் இருந்தனர். இவர்கள் கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தனர்.
வீட்டில் பெரும்பாலான நேரம் இவர்கள் ஜெபம் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியை பார்க்க இவர்களது உறவினர் ஒருவர் புதுச்சேரியில் இருந்து சொக்கம்பட்டிக்கு வந்தார். அப்போது அவர் இறந்து விட்டார் என்பதும் அவரது உடலை வீட்டுக்குள் படுக்க வைத்து மகள்கள் இருவரும் தங்களது தாயை உயிர்ப்பிப்பதாகக் கூறி ஜெபம் செய்து கொண்டு இருப்பதை பார்த்து அதி்ர்ச்சி அடைந்தார்.
திட்டி அனுப்பினர்
பின்னர் அவர்களிடம் பேசி தாயின் உடலை அடக்கம் செய்ய கூறினார். ஆனால் அவரை வீட்டில் இருந்த சகோதரிகள் இருவரும் திட்டி வெளியே அனுப்பிவிட்டனர். இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து வந்த உறவினர், அங்கிருந்து ஊர் மக்கள் சிலரிடம் ஆசிரியை இறந்த தகவலை கூறிவிட்டு மீண்டும் புதுச்சேரிக்கு சென்று விட்டார்.
இது குறித்து ஊர்மக்கள் மணப்பாறை போலீசாருக்கு சம்பவம் பற்றி தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வீட்டின் கதவுகளை தட்டியபோதும் சகோதரிகள் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்தனர்.
அழுகிய உடலுடன் ஜெபம்
உடனடியாக போலீசார் உள்ளே சென்றபோது, ஆசிரியையின் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அங்கு அவரது உடலில் பைபிள் ஒன்றை வைத்து ஜெபம் செய்துள்ளதும் தெரிந்தது. ஆனாலும் சகோதரிகள் தங்களது தாயார் உயிரோடு எழுந்து வருவார் என நம்புவதாகவும், எனவே, உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு மணப்பாறை தாசில்தார் சேக்கிழார், 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவை வரவழைத்து உடலை பரிசோதனை செய்தனர். இதில் ஆசிரியை மேரி இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது சகோதரிகள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இறந்து 7 நாட்கள் ஆனது
ஒருவழியாக ஆம்புலன்ஸ் மூலம் மேரியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர் உடலை ஆய்வு செய்ததில், மேரி இறந்து 7 நாட்கள் ஆகியிருக்கும் என தெரிவித்தார். ஆனாலும் அவரது மகள்கள் இருவரும், தங்களது தாய் இறக்க வில்லை என்றும், அவர் உயிருடன் வருவார் என கூறி மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு தொடங்கி சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே 2 மகளிடம் இருந்தும் தாயாரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
வீட்டின் பின்பகுதியில் உடல் புதைப்பு
தொடர்ந்து நேற்று காலையில் மகள்கள் இருவருக்கும் போலீசார் கவுன்சிலிங் செய்து தாய் இறந்ததையும், அவர் இனி உயிருடன் வரமாட்டார் என்பதையும் புரிய வைத்தனர். பின்னர் மேரியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவரது உடலை சொக்கம்பட்டியில் உள்ள வீட்டின் ஒரு பகுதியில் புதைக்க மகள்கள் முடிவு செய்தனர்.
இதனிடையே அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அவரது உடலை ஊர் எல்லைக்குள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானமடைந்தனர். பின்னர் மேரியின் வீட்டின் ஒரு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பைபிளை படித்து இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்று கருதி சகோதரிகள் தங்களது தாயாரின் உடலை வீட்டுக்குள் வைத்து ஒரு வார காலமாக ஜெபம் செய்து வந்தது அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story