வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்
விருதுநகரில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
விருதுநகர்,
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் நகராட்சி துப்புரவு பணியாளர் காலனி உள்ளது. இங்கு நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற நாகராஜ் என்பவர் குடியிருந்து வருகிறார். இவருடன் இவரது மனைவி லட்சுமி (வயது60) என்பவரும் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவர்களது வீட்டுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் லட்சுமி படுகாயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நகராட்சி துப்புரவு பணியாளர் காலனியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அகற்றி புதிதாக வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story