1,625 மதுபாட்டில்கள் பறிமுதல்


1,625 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Oct 2021 1:55 AM IST (Updated: 10 Oct 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 1,625 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஸ்ரீ வில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள குப்பாமடம், திருமுக்குளம் வடகரை பகுதி, ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை பகுதி, கைகாட்டி கோவில் பஜார் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 1,625 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.82,940 ஆகியவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story