தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Oct 2021 1:56 AM IST (Updated: 10 Oct 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தார்ச்சாலை வேண்டும்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருலோகி கிராமம், தோப்பு தெருவில் பல ஆண்டுகளாக தார்ச்சாலை அமைத்து தரப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்்கை இல்லை. . மேலும் மழைக்காலம் தொடங்கியதால் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், திருவிடைமருதூர்.
 தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் தேவரடியார் குளத்தின் கரையோர பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். மேலும் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் குளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக குளத்தின் கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சீரமைத்து தடுப்புச்சுவர் கட்டிதர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.            -முகமது இக்பால், ராஜகிரி.
 வடிகால் வசதி அமைத்து தரப்படுமா?
 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதிகோவில் அருகே பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதனால் கண்டியூர் சாலையில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். ஆனால் சாலை முகப்பில்  போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மழைக்காலத்தில் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். தினமும் ஏராளமானோர் இந்த சாலையில் சென்று வருவதால் வாகனஓட்டிகள் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகிறார்கள். எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
-க.பிரசாந்த், பசுபதி கோவில்.
கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகள்
தஞ்சை வடக்கு வீதியில் புகழ்பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டன. இதனால் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசத்தை சுற்றி செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் மழை நேரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள  செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.      -சங்கரன், தஞ்சாவூர். 



Next Story