பால ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு


பால ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 10 Oct 2021 2:05 AM IST (Updated: 10 Oct 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

பால ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பால ஆஞ்சநேயர் மற்றும் எழுந்தருளி சுவாமிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடைமாலை, வெற்றிலை மாலைகள் சாத்தப்பட்டன. எழுந்தருளி சுவாமிக்கு பல்வேறு பழங்களை கொண்டு பழ அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Next Story