தினத்தந்தி புகார் பெட்டி - மரக்கிளைகள் அகற்றப்படுமா?
தினத்தந்தி புகார் பெட்டி - மரக்கிளைகள் அகற்றப்படுமா?
மணியங்குழியில் இருந்து புறாவிளை செல்லும் இந்த சாலை குலசேகரம் வனத்துறைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. சாலையின் இருபுறமும் மரங்கள், ெசடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. சாலையில் பஸ் வரும்போது எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாததால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாலையில் வேலைக்கு செல்லும் ரப்பர் ஆலை தொழிலாளர்களும் விலங்குகளின் நடமாட்டத்தால் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபின் நிரேஷ், மணலோடை.
பாதசாரிகள் அவதி
தக்கலை மார்க்கெட் சாலையில் புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஒரு சில இடங்களில் பள்ளங்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால், சாலைகள் சீரமைக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், தக்கலை.
வடிகால் ஓடை தேவை
கன்னியாகுமரி பூங்குளத்துவிளையில் ரேசன்கடை உள்ளது. இந்த ரேஷன் கடை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வடிகால் ஓடை இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷாஜகான். கன்னியாகுமரி.
ஓடை சீரமைக்கப்படுமா?
தலக்குளம் ஊராட்சியில் குலாலர் தெருவில் முத்தாரம்மன் கோவில் முன்புறம் இருந்து ரேசன்கடை செல்லும் சாலையில் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மேல் பகுதியில் சிமெண்டு சிலாப் உடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையின் மேல் பகுதியை சீரமைக்க வேண்டும்.
-மூர்த்தி, தலக்குளம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
உத்தரங்கோடு பகுதியில் காந்திப்பாறை செல்லும் சாலை பல மாதங்களாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-ராஜன் முழுக்கோடு
ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்
தடிக்காரன்கோணம் பஞ்சாயத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள்படித்துவருகிறார்கள். தற்போது, இந்த மையத்தின் மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. இதனால், பெற்றோர் அச்சத்துடனேயே குழந்தைகளை அங்கு விட்டுச் செல்கின்றனர். எனவே, குழந்தைகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்.
-மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
Related Tags :
Next Story