மின்சாரம் பாய்ந்து பெண் பலி
நாகர்கோவில் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
கொத்தனார் மனவைி
நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ.காலனி மணிக்கட்டி பொட்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணப்பெருமாள், கொத்தனார். இவருடைய மனைவி ரெத்தினபாய் (வயது 50). நேற்று காலை சமையல் செய்து கொண்டிருந்தார்.
தினமும் சமையலுக்கு தேவையான கருவேப்பிலையை தனது வீட்டு மொட்டை மாடிக்கு அருகில் நிற்கும் மரத்தில் இருந்து பறிப்பது வழக்கம்.
மின்சாரம் பாய்தது
அதேபோல், நேற்று காலையும் கருவேப்பிலை பறிக்க மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது, பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. ரெத்தினபாய் கருவேப்பிலையை பறிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மரத்தில் அருகில் சென்ற மின்கம்பி அவரது கையில் உறசியது.
இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை, கணவர் நாராயணபெருமாள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரெத்தினபாய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சோகம்
பின்னர், இதுகுறித்து நாராயணபெருமாள் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சமையலுக்கு கருவேப்பிலை பறிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story