2-ம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேட்டி


2-ம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேட்டி
x
தினத்தந்தி 10 Oct 2021 3:43 AM IST (Updated: 10 Oct 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

2-ம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேட்டி

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர் மற்றும் ராதாபுரம் ஆகிய 4 ஒன்றியங்களில் 567 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அமைதியாக நடைபெற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணிகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம், மறுகால்குறிச்சி, வள்ளியூர் அருகே உள்ள ஆவரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும் பதற்றமான அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.
அமைதியான தேர்தல்
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று உள்ளது. 5 கூடுதல் சூப்பிரண்டுகள், 15 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 70 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பட்டியல் தொடர்பாக மேலும் ஆய்வு நடத்தி கூடுதலாக 20-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை இந்த பட்டியலில் சேர்த்து கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story