மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு இடையூறு; வேன் டிரைவர் கைது


மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு இடையூறு; வேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2021 3:50 AM IST (Updated: 10 Oct 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு இடையூறு வேன் டிரைவர் கைது

இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). டிரைவரான இவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருடைய உறவினர் கூந்தன்குளத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆறுமுகம் தனது வேனில் வாக்காளர்களை ஏறுமாறு கூறி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.

Next Story