தென்காசி அருகே நாய் கடித்து சிறுவன் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
நாய் கடித்து சிறுவன் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
தென்காசி:
ெதன்காசி அருகே நாய் கடித்து படுகாயமடைந்த சிறுவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
7-ம் வகுப்பு மாணவன்
தென்காசி அருகே பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில் அடிவார பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 12), அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
குமார் ஏற்கனவே இறந்து விட்டார். எனவே கருப்பசாமி தன்னுடைய தாயார் முனியம்மாவுடன் வசித்து வருகிறான்.
நாய் கடித்தது
நேற்று காலையில் கருப்பசாமி டீ வாங்குவதற்காக அங்குள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற நாய் திடீரென்று சிறுவன் கருப்பசாமியை கடித்து குதறியது. கை, கால்களில் நாய் கடித்ததால் சிறுவன் அலறி துடித்தான்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நாயை விரட்டி விட்டு சிறுவனை மீட்டனர். பின்னர் அவனை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேட்டை நாய்கள்
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘பண்ெபாழியில் பலரின் வீடுகளிலும் வேட்டை நாய்களை வளர்த்து வருகின்றனர். அவ்வப்போது காடுகளுக்கும் நாய்களை வேட்டைக்கு கொண்டு சென்று முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். அவ்வாறு வளர்க்கப்பட்ட வேட்டை நாய் தான் சிறுவன் கருப்பசாமியை கடித்து குதறி உள்ளது. எனவே நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story