பாளையங்கோட்டையில் எம்.எல்.ஏ. உறவினர் வீட்டில் நகை, பணம் திருட்டு
எம்.எல்.ஏ. உறவினர் வீட்டில் நகை, பணம் திருட்டு
நெல்லை:
பாளையங்கோட்டை தாமிரபதி காலனியைச் சேர்ந்தவர் பாப்பா (வயது 60). இவர் வீட்டை பூட்டி விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டின் முன்பக்க கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த மோதிரம், கம்மல் உள்ளிட்ட 3 பவுன் தங்க நகைகளையும், ரூ.3 ஆயிரத்தையும் திருடி சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பா, பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story