நாம் தமிழர் கட்சி போராட்டத்திற்கு தமிழ்தேச தன்னுரிமை கட்சி ஆதரவு
நாம் தமிழர் கட்சி போராட்டத்திற்கு தமிழ்தேச தன்னுரிமை கட்சி ஆதரவு
நெல்லை:
தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் அ.வியனரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட எல்லையோரம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 35-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் முறையாக அரசின் ஒப்புதல் பெற்றும், பெறாமலும் இயங்கி வருகின்றன. இந்த கல் குவாரிகளில் கனிமங்கள் விதிமுறைகளை மீறி எடுக்கப்படுகிறது. இங்கிருந்து கற்கள் சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுகிறது. இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவிலில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்ற போராட்டத்திற்கு தமிழ்தேச தன்னுரிமை கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story