செங்கோட்டையில் துப்புரவு பணியாளர்கள் கூட்டம்


செங்கோட்டையில் துப்புரவு பணியாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2021 4:45 AM IST (Updated: 10 Oct 2021 4:45 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் துப்புரவு பணியாளர்கள் கூட்டம்

செங்கோட்டை:
செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டப வளாகத்தில் வைத்து செங்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளா்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி துப்புரவு பணியாளா்கள் பிரிவு தலைவா் முருகன் தலைமை தாங்கினார். செயலாளா் காளியப்பன், செயற்குழு உறுப்பினா்கள் இசக்கி, வேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொருளாளா் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் நலச்சங்க மாவட்ட தலைவா் ஆசைத்தம்பி, மாவட்ட பொருளாளா் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
 நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களுக்கு வீட்டு வாடகை மிக அதிகமாக நகராட்சியில் பிடித்தம் செய்யப்படுகிறது. துப்புரவு பணியாளா்களின் வீட்டு வாடகையை குறைத்திட வேண்டும், என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க உறுப்பினா் சீனியம்மாள் நன்றி கூறினார்.

Next Story