காஞ்சீபுரம் அருகே டாஸ்மாக் விற்பனையாளருக்கு முகத்தில் வெட்டு


காஞ்சீபுரம் அருகே டாஸ்மாக் விற்பனையாளருக்கு முகத்தில் வெட்டு
x
தினத்தந்தி 10 Oct 2021 10:31 AM IST (Updated: 10 Oct 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே டாஸ்மாக் விற்பனையாளருக்கு முகத்தில் வெட்டு போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கூரம் கேட்டருகே ஈஞ்சம்பாக்கத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் டாஸ்மாக் விற்பனையாளராக திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த கோபி (41) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு வந்த மதுபோதை ஆசாமிகள் இருவர் இரண்டு குவார்ட்டர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அப்போது வாங்கிய மதுபானத்திற்கு உரிய பணத்தை கோபி கேட்டபோது, பணம் தர இயலாது எனவும் ஓசியில் தாருங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் மதுபோதை ஆசாமிகள் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் கோபியின் முகத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இந்நிலையில் படுகாயமடைந்த கோபியை மீட்டு, காஞ்சீபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story