விளாத்திகுளம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல்
விளாத்திகுளம் அருகே குடோனில் பதுக்கிய ரூ45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.45 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார்கைது செய்தனர்.
போலீசார் சோதனை
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தலை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேம்பார் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் பெருநாழி நாடார் தெருவை சேர்ந்த கணேசன் மகன் கருப்பசாமி (வயது 31) என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதை தொடர்ந்து அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில், தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கொண்டு வந்தது தெரியவந்தது.
வாலிபர்கைது
மேலும் விசாரணை செய்ததில் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் இவருக்கு சொந்தமான குடோனில் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் 3 மூட்டைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் தனிப்படையினர் மூலம் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருள்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story