கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பாஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பா.ஜனதா வட்டார நிர்வாகி பாஸ்கர் தாக்கப்பட்டதை யொட்டி நெல்லை எம்.பி. ஞானதிரவியம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கோரி, நெல்லை ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பு, நேற்று முன்தினம் இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நகர பா.ஜனதா தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நகர பொதுச்செயலாளர்கள் முனிராஜ், சீனிவாசன், மாநில பட்டியல் அணி செயலாளர் சிவந்தி நாராயணன், நெசவாளர் அணி மாநில செயலாளர் சீனிவாசராகவன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட துணைத்தலைவர் உமா செல்வி, மாவட்ட செயலாளர் வேல்ராஜா, ஒன்றிய தலைவர் லட்சுமணன், நகர துணைத் தலைவர்கள் அசோக், செல்வராஜ், விவசாய அணி முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் சீனிவாசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story