தூத்துக்குடி மாவட்டத்தில் 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 10 Oct 2021 8:11 PM IST (Updated: 10 Oct 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.
777 இடங்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நேற்று 5-வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 2 நாட்களிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதன்படி நேற்று முன்தினம் 791 மையங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று வழக்கமான மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 573 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 204 இடங்களிலும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் 777 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. காலை முதல் நடந்த இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசி
இந்த பணிகளில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், வருவாய் துறை, ஊரக மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், போலீஸ் பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் கொண்டு வந்து பதிவு செய்து கொண்டனர்.

Next Story