தங்கம்மாள் ஓடை கரையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த கோரிக்கை


தங்கம்மாள் ஓடை கரையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2021 8:16 PM IST (Updated: 10 Oct 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில், தங்கம்மாள் ஓடையில் இருந்து தூர்வாரப்பட்ட மண் அப்புறப்படுத்த படாமல் கரைப்பகுதியில் குவிந்து கிடக்கிறது.அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை
உடுமலையில், தங்கம்மாள் ஓடையில் இருந்து தூர்வாரப்பட்ட மண் அப்புறப்படுத்த படாமல் கரைப்பகுதியில் குவிந்து கிடக்கிறது.அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கம்மாள் ஓடை
உடுமலை நகரின் மேற்கு பகுதியில் உள்ளது தங்கம்மாள் ஓடை. இந்த ஓடையை ஒட்டி மேற்கு பகுதியில் வரிசையாகவும், அதையடுத்தும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஓடையை ஒட்டியுள்ள தங்கம்மாள் ஓடை வீதிக்கு கிழக்குப்புறம் முழுவதும் குடியிருப்பு பகுதிகளாகும்.
இந்த ஓடை கழிவுநீர் கால்வாயாகவும் உள்ளது. மழைகாலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் அதிகம் செல்லும். அத்துடன் உடுமலை நகரை அடுத்துள்ள ஒட்டுக்குளம் நிறைந்தால் உபரிநீர் இந்த ஓடையில்தான் திறந்து விடப்படும்.
இந்த ஓடையை தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் நகராட்சி நிர்வாகம் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மண் குவியல்
ஓடையில் இருந்து தூர்வாரப்பட்டு எடுக்கப்பட்ட மண் ஓடையின் கரைப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு மலைபோன்று குவித்து வைக்கப்பட்டுள்ளது. மழை அதிகமாக பெய்யும் காலத்தில் அந்த மண் குவியல் சரிந்து மீண்டும் ஓடைக்குள்தான் விழும். அதனால் தூர்வாரப்பட்டதின் முழுப்பயன் கிடைக்காமல் போகும். அத்துடன் இந்த ஓடையின் மேற்கு பகுதியில் இருந்து ஓடையை கடந்து தங்கம்மாள் ஓடைவீதிக்கு வருவதற்கு சிறு சிறு பாலங்கள் உள்ளன.
இதன்வழியாக இருசக்கர வாகனங்களில் வீதிக்கு வரும்போது மண் குவியலால் தங்கம்மாள் ஓடை வீதியில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. அதனால் அந்த இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
கோரிக்கை
அதனால் ஓடையின் கரைப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story