ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை தடுப்பூசி போடும் பணி
வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் வருவோருக்கு ரெயில் நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்
வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் வருவோருக்கு ரெயில் நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகம் வழங்கும் மாவட்டங்களில் திருப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வருகின்றனர்.
தொழில் துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால், உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். இதனால் திருப்பூருக்கு வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தடுப்பூசி போடும் பணி தீவிரம்
அதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுபோல் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் பின்னரே தொழிலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்த நிலையில் ரெயில்களில் வந்தவர்களுக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதுடன், தடுப்பூசியும் போடப்பட்டது. இதனை மருத்துவக்குழுவினரும் கண்காணித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story