பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ. 26 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ. 26 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
முத்தூர்
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ. 26 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
மாட்டுத்தாவணி
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன மாட்டுச் சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்பட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசு மாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசு மாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக வந்தன.
ரூ.26 லட்சத்துக்கு விற்பனை
சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 105 காங்கேயம் இன காளைகள், பசு மாடுகளில் 65 மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் மொத்தம் ரூ.26 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story