காங்கேயம் பகுதிகளில் 7600 பேருக்கு கொரோனா தடுப்பூசி


காங்கேயம் பகுதிகளில் 7600 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 10 Oct 2021 8:40 PM IST (Updated: 10 Oct 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் பகுதிகளில் 7600 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

காங்கேயம்
காங்கேயம் பகுதிகளில்  7,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனா அலையை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஆலாம்பாடி ஊராட்சி கல்லேரி, மறவபாளையம், படியூர், அரசம்பாளையம், நத்தக்காடையூர், மருதுறை, பரஞ்சேர்வழி, வரதப்பம்பாளையம், வீரணம்பாளையம், பொத்தியபாளையம், களிமேடு, காங்கேயம் நகரம் பழையகோட்டை சாலையில் உள்ள அரசு பள்ளி, திருப்பூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது.
 சாவடிப்பாளையம், நத்தக்காடையூர், பாப்பினி, காங்கேயம் நகரம் சத்யாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும். சிவன்மலை, கஸ்பா பழையகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மினி கிளினிக்கிலும் மற்றும் காங்கேயம் அரசு மருத்துவமனை என காங்கேயம் பகுதிகளில்  4,100 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.
தாராபுரம்
தாராபுரம், அலங்கியம், பொன்னாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி சுகாதார வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், நவீன் மற்றும் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். அதில் நேற்று மட்டும் 3500-க்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
மேலும் தாராபுரம் பகுதியில்  2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்தூர்
முத்தூர் அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவமனை வளாகம் உட்பட 11 இடங்களில்  நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மூலம் நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்கள் 720 பேருக்கு முதல், 2- வது தவணை தடுப்பூசி  போடப்பட்டது.
 நத்தக்காடையூர் பகுதிகளில்  6 இடங்களில் நடைபெற்ற முகாமில் 495 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன்படி முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் மொத்தம் 1,215 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story