திருக்கடையூர் அருகே ‘கேப்சூல்’ மூலம் சம்பா சாகுபடி விவசாயி புதிய முயற்சி


திருக்கடையூர் அருகே ‘கேப்சூல்’ மூலம் சம்பா சாகுபடி விவசாயி புதிய முயற்சி
x
தினத்தந்தி 10 Oct 2021 9:19 PM IST (Updated: 10 Oct 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அருகே கேப்சூல் மூலம் சம்பா சாகுபடி செய்யும் புதிய முயற்சியை விவசாயி ஒருவர் மேற்கொண்டுள்ளார்.

திருக்கடையூர்:-

திருக்கடையூர் அருகே கேப்சூல் மூலம் சம்பா சாகுபடி செய்யும் புதிய முயற்சியை விவசாயி ஒருவர் மேற்கொண்டுள்ளார்.

சம்பா சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.  திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், மாத்தூர், காலமநல்லூர், மாமாகுடி, கிடங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றங்கால் அமைத்து சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கேப்சூல்

திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெருவை சேர்ந்த கலைவாணன் என்ற விவசாயி தனது வயலில் ‘கேப்சூல்’ மூலம் நேரடியாக வயலில் நெல் விதைப்பு செய்து சாகுபடி செய்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் கேப்சூலில் விதை நெல், உரம் உள்ளிட்டவற்றை அடைத்து அதை மண்ணில் விதைத்து விடுவதே இந்த முறையாகும். இந்த புதிய முறையில் நெல் சாகுபடி செய்ய குறைந்த அளவே விதை நெல் தேவைப்படுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து கலைவாணன் கூறியதாவது:-

வீரியமாக வளரும்

தற்போது சம்பா சாகுபடியில் புதிய முயற்சியாக கேப்சூல் மூலமாக நெல் விதைத்து வருகிறேன். கேப்சூலில் 2 விதைகளுடன், வேப்பங்கொட்டை தூள், நுண்ணூட்டச்சத்து உள்ளிட்டவற்றை அடைத்து வயலில் பட்டம் போட்டு நேரடியாக நெல் விதைப்பு செய்துள்ளோம்.
கேப்சூல் முறையில் பயிர்கள் வீரியமாகவும் வளரும். தண்ணீர் தேவையும் குறைவு. ஒரு ஏக்கருக்கு 60 மூட்டை வரை மகசூல் கிடைக்கிறது. நாற்றங்கால் அமைத்து நடவு பணி மேற்கொள்வதை விட கேப்சூல் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story