பூங்காக்கள், அணைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு
பூங்கா, அணைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொழுதுப்போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தத் தடை வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிட வேண்டும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story