குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரெயில் சென்றதால் பயணிகள் ஏமாற்றம்


குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரெயில் சென்றதால் பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 10 Oct 2021 11:26 PM IST (Updated: 10 Oct 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் இருந்து பெங்களூருக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரெயில் சென்றதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காட்பாடி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து பெங்களூரு செல்வதற்கு சில பயணிகள் நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்றனர் அப்போது திருப்பதியில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் முன்பு புறப்பட்டு சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்குள்ள ரெயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

திருப்பதியில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால் 10 நிமிடம் முன்பே புறப்பட்டு சென்று விட்டது. 

இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறி மாற்று ஏற்பாடு செய்யச் சொன்னோம். ஆனால் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர். 

பின்னர் அவர்கள் காட்பாடியிலிருந்து பஸ் மூலம் வேலூர் பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து பெங்களூருக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.


Next Story