ஒரு லிட்டர் டீசல் ரூ100ஐ நெருங்குகிறது
திருப்பூரில் பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசலும் ஒரு லிட்டர் ரூ.100ஐ நெருங்கியுள்ளதால் சைக்களில் செல்லும் நிலை வந்து விடுமோ என்று வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூரில் பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசலும் ஒரு லிட்டர் ரூ.100ஐ நெருங்கியுள்ளதால் சைக்களில் செல்லும் நிலை வந்து விடுமோ என்று வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
டீசல் ரூ.100 ஐ நெருங்குகிறது
ஒரு காலத்தில் சமையல் கியாஸ், இரு சக்கர வாகனம், கேபிள் டி.வி., கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கூட செல்போன் ஆகியவை ஆடம்பரமாக இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் சமையல் கியாஸ் இல்லை என்றால் பட்டினி. இருசக்கர வாகனம் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது. கேபிள் டி.வி. இணைப்பு (டிஸ்) இல்லை என்றால் எந்த ஒரு தகவலும் தெரியவாய்ப்பு இல்லை. செல்போன் ரீசார்ஜ் செய்ய வில்லை என்றால் அன்றைய தினம் பித்துப்பிடித்தபோல் ஆகி விடும். அது போல் மின்சாரம். அதுவும் வாழ்க்கையில் ஒரு அங்கம். இவற்றில் ஒன்று இல்லை என்றால் அன்றைய வாழ்க்கை முடங்கி விடும். இதனால் அனைத்தும் வாழ்க்கையில் இன்றியமையாததாகி விட்டது. இவற்றுடன் தற்போது கேன் குடிநீரும் சேர்ந்து கொண்டது. விரையில் காற்றும் இந்த பட்டியலில் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் மேலே கூறிய அனைத்து கட்டணமும் ஒவ்வொரு நாளும் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து செல்வது ஏழை, நடுத்தர மக்களை நிலை குலைய செய்துள்ளது.
எந்த ஒரு பொருளையும் விலை நிர்ணயம் செய்ய அடிப்படை காரணம் போக்குவரத்து செலவு. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டன. 100 ரூபாய்க்கு 3 லிட்டர் பெட்ரோல் நிரப்பிய காலம் மாறி இப்போது 100 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கவில்லை. அதுபோல் டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து தற்போது லிட்டர் ரூ.100-ஐ நெருங்கி விட்டது.
தொழில்நகரமான திருப்பூரில் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிறவர்கள் பலரும் இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். இதுபோல் ஆடைகள் ஜாப் ஒர்க் செய்ய 4 சக்கர வாகனங்களில் கொண்டு செல்வது என பல்வேறு பணிகளுக்காக பல வாகனங்கள் திருப்பூரில் சென்று கொண்டிருக்கும்.
இதன் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், விரைவாக செல்லவும் பலர் சொந்த வாகனங்களில் செல்கிறார்கள். வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. பெட்ரோல் விலையை தொடர்ந்து தற்போது டீசல் விலையும் 100-ஐ நெருங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் கவலை
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் சிரமத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிற தொழிலாளர்கள் சம்பளத்தில் பெரும்பகுதி பெட்ரோலுக்கு செலவு செய்யும் நிலை உள்ளது. நேற்று மாநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.11-க்கும், டீசல் ரூ.97.85-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோலை தொடர்ந்து டீசலும் லிட்டருக்கு 100-ஐ நெருங்கியுள்ளது கவலையளிக்கிறது. இதனால் சைக்கிளில் செல்லும் காலம் வந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிறுவனங்களில் வழங்கப்படும் பெட்ரோல், டீசலுக்கான தொகையை தற்போதைய விலையுடன் ஒப்பிட்டு உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story