வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்டவற்றில் தினமும் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா தடுப்பு விதியை பின்பற்றாத பொதுமக்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 13 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 21 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் தொற்று பலியானோர் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story