வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது


வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
x

வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.

நச்சலூர்,
தர்மபுரியில் இருந்து நேற்று அதிகாலை 3½ மணியளவில் வெங்காயம் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. இதில் டிரைவர் மற்றும் கிளீனர் பயணம் செய்தனர். குளித்தலை அருகே குமாரமங்களம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று மோதுவது போல் வந்ததால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் இடது பக்கமாக திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Next Story