ஆம்புலன்ஸ் வர தாமதம்: விபத்தில் சிக்கியவரை மீட்ட போலீசார் சரக்கு வேனில் அழைத்து சென்று சிகிச்சை


ஆம்புலன்ஸ் வர தாமதம்:   விபத்தில் சிக்கியவரை மீட்ட போலீசார் சரக்கு வேனில் அழைத்து சென்று சிகிச்சை
x
தினத்தந்தி 11 Oct 2021 12:00 AM IST (Updated: 11 Oct 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கியவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). இவர், செரியலூர் இனாம் கிராமத்தில் தனது தாயாருடன் தங்கி இருந்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை கீரமங்கலம் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற போது பட்டுக்கோட்டை ரோட்டில் நிலை தடுமாறி எதிரே வந்த சரக்கு வேனில் மோதி படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீரமங்கலம் ஆம்புலன்ஸ் வேறு இடத்திற்கு சென்றுள்ளதால் அறந்தாங்கியிலிருந்து ஆம்புலன்ஸ் வரும் தகவல் அறிந்து கால தாமதம் ஏற்பட்டால் ரத்தம் அதிகமாக வெளியேறும் என்பதால் உடனே முருகானந்தத்தை ஒரு சரக்கு வேனில் ஏற்றிய தனிப்பிரிவு போலீசார் மற்றும் போலீஸ்காரர் இசக்கியா வேனை வேகமாக ஓட்டிச் சென்று கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு விபத்தில் காயமடைந்தவரை வாகனத்தில் ஏற்றிச் சென்ற போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story