சுரண்டை அருகே அடுத்தடுத்து சோகம்: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
சுரண்டை:
சுரண்டை அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தம்பதி
ெதன்காசி மாவட்டம் சுரண்ைட அருேக உள்ள சாம்பவா் வடகரை அணைந்த பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் என்ற பச்சைக்கனி (வயது 65). இவரது மனைவி களஞ்சியம் (58). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளாக களஞ்சியம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் நாராயணன் பல்வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.
அடுத்தடுத்து சாவு
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நாராயணனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, பரிதாபமாக இறந்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த களஞ்சியம் காலை 6 மணி அளவில் மரணம் அடைந்தார். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் வந்து சாவிலும் இணைபிரியாத தம்பதியை பார்த்து சென்றனர்.
கணவன் இறந்த 2 மணி நேரத்தில் மனைவியும் பரிதாபமாக இறந்த சம்பவத்தால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது.
அடுத்தடுத்து நடந்த இந்த சோக சம்பவம் குறித்து சாம்பவர் வடகரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----.............
Related Tags :
Next Story