களக்காடு அருகே உடும்பு வேட்டையாடியவர் கைது


களக்காடு அருகே உடும்பு வேட்டையாடியவர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2021 2:01 AM IST (Updated: 11 Oct 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

உடும்பு வேட்டையாடியவர் கைது

களக்காடு:
களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கசாமி மகன் ராஜாசிங் (வயது 45). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
இவரது வீட்டில் உடும்பு கறி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில், வனசரகர் பாலாஜி தலைமையில், வனக்காப்பளர்கள் செல்வராஜ், லிங்கம், சுரேஷ், ஹரிகரன், வன காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஆகியோர் நேற்று அதிகாலை ராஜாசிங் வீட்டிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அவர் வீட்டில் உடும்பு கறி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ராஜாசிங்கை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வடக்கு பச்சையாறு அணை பகுதியில் ஆடுகள் மேய்க்க சென்றபோது, ராஜாசிங்கும், அதே ஊரைச் சேர்ந்த தங்கத்துரை மகன் ரவி (27), இஞ்சின்துரை மகன் ஊய்காட்டான் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து உடும்பை வேட்டையாடி அதனை வெட்டி துண்டுகளாக்கி பங்கு போட்டு வீடுகளுக்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது. கைதான ராஜாசிங் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாகியுள்ள ரவி, ஊய்காட்டான் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story