கொரோனா தடுப்பூசி போட 750 முகாம்கள்


கொரோனா தடுப்பூசி போட 750 முகாம்கள்
x
தினத்தந்தி 11 Oct 2021 2:29 AM IST (Updated: 11 Oct 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி போட 750 முகாம்கள்

நெல்லை, அக்.11-
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட 750 முகாம்கள் அமைக்கப்பட்டன. வீடு வீடாகவும் சென்று தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதே போல் நெல்லை மாவட்டத்திலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. நேற்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 750 மையங்களில் முகாம் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதில் மாநகர் பகுதியில் 200 முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு ஊசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்களை கலெக்டர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாமை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டார். அங்கு ஊசி போட வந்தவர்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
பின்னர் அருகில் உள்ள பரணி நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா? என கேட்டு, தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறினார்.
69.19 சதவீதம்
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 7 லட்சத்து 13 ஆயிரத்து 646 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 2 லட்சத்து ஆயிரத்து 336 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 69.19 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
நேற்று 1 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி முகாம் ராதாபுரம் வட்டார அளவில் 55 இடங்களில் நடந்தது. திசையன்விளையில் 14 இடங்களில் முகாம் நடைபெற்றது. அற்புத விநாயகர் கோவில் சந்திப்பில் நடந்த முகாமிற்கு திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெனிஷா வினோதனி முகாமை தொடங்கி வைத்தார் முகாமில் 2,554 பேர் தட்டுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story