கோவில்களில் சிலைகளை உடைத்த வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதி
கோவில்களில் சிலைகளை உடைத்த வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில்களில் சாமி சிலைகளையும், பெரியாண்டவர் கோவில் சாமி சிலைகளையும், அம்பாள் நகரில் உள்ள சித்தர்கள் கோவில் சாமி சிலைகளையும் உடைத்ததாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுகா, கால்நாட்டான்புலியூரை சேர்ந்த நாதனை (வயது 38) பெரம்பலூர் போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் மதியம் பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாதன், தான் குற்றம் செய்யவில்லை என்றும், தன்னை விடுவிக்கக்கோரியும் சிறையில் இரவில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்துள்ளார். இதையடுத்து சிறையில் இருந்த நாதனை சிகிச்சைக்காக போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கும் அவர் நேற்று காலை, மதியம் வழங்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்ததோடு, சிகிச்சை அளிக்கவும் ஒத்துழைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story