சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாடுகள் சாவு
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாடுகள் செத்தன
உடையார்பாளையம்:
3 மாடுகள் செத்தன
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் 6 பசுமாடுகள் வளர்த்து வந்தார். இதில் 2 பசுக்கள் சினையாக உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை அந்த மாடுகள் அவரது வீட்டின் அருகில் உள்ள வயல் வெளியில் மேய்ந்தன.
அப்போது திடீரென மழை பெய்தது. இதில் ராமசாமி என்பவருடைய வீட்டின் அருகே உள்ள சுற்றுச்சுவர் இடிந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் 3 மாடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. மேலும் ஒரு சினை பசுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வளவெட்டிகுப்பம் கால்நடை மருத்துவர் இளையராஜா சம்பவ இடத்திற்கு வந்து மாடுகளை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். சுவர் இடிந்ததில் 3 மாடுகள் செத்ததால், ராமமூர்த்தி குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story