குற்றாலம் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா?
குற்றாலம் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
தென்காசி:
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். அப்போது இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தில் இருந்து மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வார்கள்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் கொட்டுகிறது
இந்த நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பல்வேறு தளர்வுகள் அரசு அளித்தும் வரும் நிலையில் குற்றாலம் அருவிகளில் மட்டும் குளிக்க தடை நீடித்து வருகிறது.
எனவே இந்த தடையை நீக்கி கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story