ஆட்டையாம்பட்டி அருகே மரத்தில் மொபட் மோதி மாணவன் பலி-போலீஸ் விசாரணை


ஆட்டையாம்பட்டி அருகே மரத்தில் மொபட் மோதி மாணவன் பலி-போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2021 3:37 AM IST (Updated: 11 Oct 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டையாம்பட்டி அருகே மரத்தில் மொபட் மோதி மாணவன் பலியானான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆட்டையாம்பட்டி:
ஆட்டையாம்பட்டி அருகே மரத்தில் மொபட் மோதி மாணவன் பலியானான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-1 மாணவன்
ஆட்டையாம்பட்டி அருகே கண்டரமாணிக்கம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 17). வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1  படித்து வந்தான்.
நேற்று முன்தினம் அதிகாலையில் பகுதிநேர வேலைக்கு சென்ற மாணவன் தமிழ்ச்செல்வன், காக்கா பாளையத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி பகுதிக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தான்.
மரத்தில் மொபட் மோதியது
அப்போது மொபட் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் நின்ற புளியமரத்தில் மோதியது. இதில் தமிழ்செல்வன் பலத்த காயம் அடைந்தான். அவனை மீட்டு சீரகாபாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனை பரிசோதனை டாக்டர்கள் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, சப்- இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story