ஆயுத பூஜையையொட்டி சேலம் மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 325 சிறப்பு பஸ்கள்-நாளை முதல் இயக்கப்படுகிறது
ஆயுத பூஜையையொட்டி நாளை முதல் சேலம் மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 325 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம்:
ஆயுத பூஜையையொட்டி நாளை முதல் சேலம் மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 325 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வருகிற 14-ந் தேதியும் (வியாழக்கிழமை), விஜயதசமி 15-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் 14, 15-ந் தேதிகள் அரசு விடுமுறையாகும். மேலும் வருகிற 16, 17-ந் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறையாக இருப்பதால் வெளியூர் செல்ல அதிகமானோர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதாவது, சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு 325 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
18-ந் தேதி வரை இயக்கம்
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, ஆயுத பூஜையையொட்டி சேலம் மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு நாளை முதல் 18-ந் தேதி வரை 325 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 150-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முக்கியமாக பயணத்தின் போது அனைவரும் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றனர்.
3½ லட்சம் பேர்
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவருடைய உதவியாளர்களுக்கு இலவச பயணம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் சேலம் மண்டலத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.3½ லட்சம் பேர் இலவச பயணம் மேற்கொள்கின்றனர் என்றனர்.
Related Tags :
Next Story