ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டியவர் கைது


ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2021 5:14 AM IST (Updated: 11 Oct 2021 5:14 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

கமுதி, 
கமுதி அருகே மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் குமரய்யா (வயது28). இவர் கமுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் கே.வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரின் மகன் கண்ணாயிரமூர்த்தியை கமுதியில் இருந்து ஆட்டோவில் ஏற்ற  மறுத்துள்ளார். இதையடுத்து கண்ணாயிரமூர்த்தி, குமரய்யாவிடம் வாக்குவாதம் செய்த, பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குமரய்யாவை வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர், கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில்  கமுதி போலீசார் கண்ணாயிரமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story