தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு உடனடி தடுப்பூசி
தொண்டியில் ஆர்.டி.ஓ. அதிரடி ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு உடனடி தடுப்பூசி செலுத்தினர்.
தொண்டி,
தொண்டியில் ஆர்.டி.ஓ. அதிரடி ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு உடனடி தடுப்பூசி செலுத்தினர்.
ஆய்வு
திருவாடானை தாலுகாவில் தொண்டி மங்கலக்குடி, வெள்ளையபுரம், எஸ்.பி.பட்டினம், பாண்டுகுடி, திருவெற்றியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சுமார் 65 இடங்களில் கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக் மன்சூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தொண்டி நகரில் அதிரடி ஆய்வு மேற் கொண்டு ஜவுளி, மளிகை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தினசரி காய்கறி, பழக்கடைகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு கடைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கடை உரிமையாளர், ஊழியர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா என கேள்வி எழுப்பினார்.
விழிப்புணர்வு
மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று உள்ளதா என கேட்டு அதனை ஆய்வு செய்து பார்வை யிட்டார். அப்போது அந்த கடைகளில் தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்த இடத்திலேயே ஆர்.டி.ஓ. முன்னிலையில் தடுப்பூசி போடப்பட்டது. ஒரு கடையில் சோதனையிட்டபோது தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாற்றுத்திறனாளிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.
இதுதொடர்பாக வியாபரிகளிடம் கூறிய ஆர்.டி.ஓ. கடையில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அடுத்த முறை ஆய்வின்போது கடையில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டு இருக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
ஆய்வின்போது தாசில்தார் செந்தில்வேல் முருகன், வட்டார மருத்துவ அலுவலர் கோவலகண்ணன், துணை தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் அமுதன், கிராம நிர்வாக அலுவலர் சேக்ரட்நாத் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர். தடுப்பூசி முகாம்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, சேவுகப்பெருமாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டனர். இதில் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story